Welcome to KG Multi Specialty Hospital And Research Centre

We, Right Hospitals, Thanjavur. In Medical Services Since 2006 have entered in to a new venture KG MULTISPECIALITY HOSPITAL AND RESEARCH CENTRE is today 200 bedded unit, acute-care, tertiary hospital with 18 Clinical Departments and Paramedical Departments. The Hospital a number of Specialist Out Patient Clinics, Specialized Operation Theatre, Medical Record Office, Pharmacies and other Facilities providing a comprehensive array of Medical Services.

Departments

Testimonial

எனது கணவர் திரு.மணிவண்ணன் கஜா புயலின் பாதிப்பு பகுதியில் மீட்பு பணியில் மின்சாரம் கம்பம் பழுதுபார்க்கும் வேலையில் ஈடுபட்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டார் .அவரது முதுகு, கை மற்றும் இருகால்களிலும் மிகவும் அதிகமான தீக்காயம் ஏற்பட்டது. உடனே அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் ஆனால் என்கணவரின் உடல் நிலைமிகவும் மோசமாக இருந்ததால் மேல்சிகிச்சைக்காக அதிகவசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். நாங்களும் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் என்கணவரின் உடல்நலம்மிகவும் மோசமாக இருந்ததால் அங்குள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க இயலாது என்று தெரிவித்தனர்.

நாங்கள் வந்த ஆம்புலன்ஸ் டிரைவரின் பரிந்துரையின் பேரில் தஞ்சை KG மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்குமுதல் உதவி சிகிச்சை மிகவும் துரிதமாக ஆரம்பித்தனர். மருத்துவர் அவரது உடல்நிலையை விளக்கிக்கூறி 48மணி நேரகெடுவிதித்தனர். எங்கள்பயத்தை போக்கும் விதத்தில் எனது கணவரின் உடல் நலம்படிப்படியாக முன்னேற்றம் அடைந்தது. மற்றும் மருத்துவசிகிச்சையைப்பற்றி உடனுக்குடன் எங்களுக்கு தெரிவிக்கபட்டது. மருத்துவரின் தீவிரகவனிப்பால் உடல் நிலையில் நல்லமுன்னேற்றம் அடைந்தார். மேலும் மருத்துவமனை நிர்வாகம் உயிர்காக்கும் மருந்துகளுக்கும் மற்றும் மருத்துவர் கட்டணத்திலும் சலுகைகள் வழங்கப்பட்டது.

மருத்துவமனை மற்றும் நல்ல உள்ளங்கள் கொண்ட பொதுமக்களின் உதவிகளும் கிடைக்கப் பெற்றது. மருத்துவமனை ஊழியர்கள் மிகவும் நேர்த்தியாகவும் அக்கறையுடன் கவனித்து கொண்டனர். இப்போது எனது கணவர் நலமுடன் அவரது வேலையைசுயமாக பார்த்துக் கொள்ளும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார். மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு எங்களது உள்ளம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் மருத்துவ சேவைமென் மேலும் தொடர ஆண்டவனை தினமும் பிராத்திக்கிறேன்.

நன்றி

– இப்படிக்கு

மஹேஸ்வரி

உப்பிலியப்பன்கோவில், திருநாகேஸ்வரம்

தஞ்சாவூர்.